கடைகளுக்கான வாடகை நிலுவை தொகையை உடனே செலுத்தக்கோரி வியாபாரிகளுக்கு நோட்டீஸ்
ஊட்டியில் நகராட்சிக்கு சொந்தமான கடைகளுக்கான வாடகை நிலுவை தொகையை உடனே செலுத்தக்கோரி வியாபாரிகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு உள்ளது.
ஊட்டி,
ஊட்டியில் நகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகம் மற்றும் மார்க்கெட்டில் 1,700-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்த கடைகளை வியாபாரிகள் வாடகை அடிப்படையில் பயன்படுத்தி வருகின்றனர்.
ஆனால் அதில் 500-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் வாடகையை சரிவர செலுத்தாமல், நிலுவையில் வைத்து உள்ளதாக தெரிகிறது. இதனால் வாடகை நிலுவை தொகையை உடனே செலுத்தக்கோரி நகராட்சி சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டு உள்ளது. அந்த நோட்டீசில், 24 மணி நேரத்துக்குள் வாடகை நிலுவை தொகையை செலுத்தாவிட்டால், கடைகள் பூட்டி சீல் வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையடுத்து ஊட்டி மார்க்கெட் வியாபாரிகள் மற்றும் நகராட்சி ஆணையாளரின் நேர்முக உதவியாளர் இளவரசனிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர் நிலுவை தொகையில் 25 சதவீதத்தை உடனடியாக செலுத்தவும், மீதமுள்ள தொகையை அடுத்த மாதத்துக்குள் செலுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story