கோயம்பேட்டில் போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் லஞ்சம் வாங்கும் காட்சி வெளியாகி பரபரப்பு; சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது

சென்னையில் விதிமுறைகளை மீறி வாகனம் ஓட்டுபவர்களிடம் போக்குவரத்து போலீசார் அபராதம் விதிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் கோயம்பேடு அருகே போக்குவரத்து சப்- இன்ஸ்பெக்டர் ஒருவர் வாகன ஓட்டிகளிடம் லஞ்சம் வாங்குவது போல் வீடியோ காட்சி ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானதால் பரபரப்பு ஏற்பட்டது.
அந்த வீடியோ காட்சியில், வாகன தணிக்கையில் ஈடுபடும் போக்குவரத்து அதிகாரி ஒருவர், மணல் ஏற்றி வந்த லாரியை நிறுத்தி அதன் டிரைவரிடம் ‘முதலில் ரூ.1,000 கேட்பது போலவும், மணல் ஏற்றி வந்ததற்கான உரிய சான்று உள்ளது என்று அந்த டிரைவர் கூறவே அப்படி என்றால் ரூ.500 லஞ்சம் கொடுத்து விட்டு செல்’ என்று கூறுவது போலவும் பதிவாகி இருந்தது.
இந்த காட்சியை செல்போனில் வீடியோவாக எடுத்த ஒருவர், சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து போலீஸ் உயரதிகாரிகள் கூறுகையில், லஞ்சம் வாங்குவது போல் வீடியோவில் இருக்கும் போக்குவரத்து போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்தனர்.
Related Tags :
Next Story