தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட முன்னாள் ராணுவ வீரர்களுக்கு அழைப்பு


தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட முன்னாள் ராணுவ வீரர்களுக்கு அழைப்பு
x
தினத்தந்தி 22 March 2021 3:41 PM IST (Updated: 22 March 2021 3:41 PM IST)
t-max-icont-min-icon

தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட முன்னாள் ராணுவ வீரர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஊட்டி

நீலகிரி போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

நம் நாட்டிற்காக தேசத்தின் பல்வேறு இடங்களில் பணிசெய்து பெருமையுடன் திகழும் முன்னாள் ராணுவத்தினர் மீண்டும் சேவை செய்வதற்கு ஒரு வாய்ப்பாக தமிழகத்தில் ஏப்ரல் 6-ந் தேதி நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் நீலகிரி மாவட்ட காவல்துறையுடன் இணைந்து பணியாற்ற அனைவரும் முன்வருமாறு அழைப்பு விடுக்கப்படுகிறது. 

இதுவரை தமிழகத்தில் நடந்த தேர்தல்கள் அனைத்திலும் தங்களது பங்களிப்பால சிறப்பாகவும், அமைதியான முறையிலும் நடைபெற்றன. அதேபோல் இந்த ஆண்டும் தங்களது பங்களிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். 

தேர்தல் பணி செய்பவர்களுக்கு தகுந்த ஊதியம் வழங்கப்படும். அவர்கள் தேர்தலில் தபால் வாக்குப் பதிவு செய்வதற்கான ஏற்பாடுகளும் செய்து தரப்படும். 

எனவே, விருப்பம் உள்ள முன்னாள் ராணுவ வீரர்கள் நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் உள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையை 0423-2223055 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story