விவசாயிகளின் நலன்கருதி காவிரியில் நிரந்தர கொரம்பு அமைப்பேன் - அ.தி.மு.க. வேட்பாளர் பரஞ்ஜோதி வாக்குறுதி
விவசாயிகளின் நலன்கருதி காவிரியில் நிரந்தர கொரம்பு அமைப்பேன் என அ.தி.மு.க. வேட்பாளர் பரஞ்ஜோதி உறுதியளித்தார்.
மண்ணச்சநல்லூர்,
மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக முன்னாள் அமைச்சரும், திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளருமான மு.பரஞ்ஜோதி போட்டியிடுகிறார். இவர் நேற்று முசிறி ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த குணசீலம், மஞ்சக்கோரை, கல்லூர், காந்திநகர், அம்பேத்கர் நகர், வேப்பந்துறை, மணப்பாளையம், காந்திநகர், காலனி கொடுந்துரை, ஆமூர் காந்திசிலை, ஆமூர் அக்ரஹாரம், ஆமூர் மாரியம்மன் கோவில், கரளவாளி, அண்ணாநகர், கோட்டூர், கருப்பம்பட்டி, பெரியார் நகர், பாண்டியன் நகர், கொள்ளப்பட்டி, ஆதிதிராவிடர் தெரு, காளியாபாளையம், அக்ரஹாரம், ஆசாரி பாளையம், அய்யம்பாளையம், பாரதிநகர், அம்பேத்கர் நகர், கள்ளர் தெரு, புது தெரு, வேலி, சாலப்பட்டி ஆகிய கிராமங்களில் கொளுத்தும் வெயிலில் திறந்தவெளி ஜீப்பில் சென்றும், ஜீப் செல்ல முடியாத இடங்களில் நடந்தே சென்றும் இரட்டை இலை சின்னத்துக்கு ஆதரவு அளிக்கும்படி தீவிர பிரசாரம் செய்தார்.
வாக்கு சேகரிப்பின் போது, அய்யம்பாளையம், ஆவூர், குணசீலம், ஏவூர் ஊராட்சி பகுதிகளில் விவசாயிகளின் நலன்கருதி பாசன வசதி பெறுவதற்கு காவிரியில் நிரந்தர கொரம்பு அமைப்பேன் என உறுதியளித்தார்.
வேட்பாளருடன் முன்னாள் அமைச்சர் டி.பி.பூனாட்சி, அ.தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் சின்னையன், ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் ரமேஷ், கூட்டுறவு வங்கி தலைவர் அறிவழகன், முன்னாள் துணை தலைவர் வெற்றி செல்வி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் விமலா, ஊராட்சி தலைவர் பாஸ்கர் மற்றும் பா.ம.க., த.மா.கா உள்ளிட்ட கூட்டணி கட்சிகளை சேர்ந்தவர்கள் ஏராளமானவர்கள் சென்றிருந்தனர்.
Related Tags :
Next Story