இடிந்து விழும் நிலையில் பள்ளி வளாகத்தில் உள்ள குடிநீர் தொட்டி அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே உள்ள கலவை ஊராட்சிக்கு உட்பட்ட ஆலப்பாக்கம் கிராமத்தில் அரசு ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது.
இப்பள்ளி வளாகத்தில் சுமார் 30 வருடங்களுக்கு முன் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் மேல்நிலை தொட்டி அமைக்கப்பட்டது. இந்த தொட்டியில் இருந்து கிராம மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது.
இந்த நிலையில் குடிநீர் மேல்நிலை தொட்டியை தாங்கும் தூண்களில் சிமெண்ட் பூச்சு பெயர்ந்து விழுந்ததால் இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால் எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது.
கொரோனா தொற்று பரவலை தடுக்க தற்போது பள்ளி மூடப்பட்டு உள்ளது. ஆனாலும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்து செல்கின்றனர். ஆபத்தை உணர்ந்து பயன்பாடு இல்லாத இந்த குடிநீர் மேல்நிலை தொட்டியை உடனே அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
Related Tags :
Next Story