அய்யன்கொல்லி அருகே வனப்பகுதியில் தீ தடுப்புகோடு அமைக்கும் பணி தீவிரம்


அய்யன்கொல்லி அருகே வனப்பகுதியில் தீ தடுப்புகோடு அமைக்கும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 24 March 2021 12:35 AM IST (Updated: 24 March 2021 12:36 AM IST)
t-max-icont-min-icon

அய்யன்கொல்லி அருகே வனப்பகுதியில் தீ தடுப்புகோடு அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்றது.

பந்தலூர்,

பந்தலூர் தாலுகா அய்யன்கொல்லி அருகே கோட்டப்பாடி பகுதியில் அடர்ந்த வனப்பகுதி உள்ளது. தற்போது கடும் வெயில் காரணமாக காடுகளில் உள்ள புல் செடிகளும் முற்புதர்களும் காய்ந்த நிலையில் காணப்படுகிறது. 

இதனால் காட்டு தீ ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் வனப்பகுதியில் காட்டு தீ பரவாமலை் இருக்க வனத்துறையினர் தீ தடுப்பு கோடுகள் அமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். 

இதன்படி பிதிர்காடு வனச்சரகர் மனோகரன், வனவர் பரமேஸ்வரன், வனகாப்பாளர் ராஜேஸ்குமார் மற்றும் வனத்துறையினரும் வேட்டை தடுப்பு காவலர்களும் இரவு நேரங்களில் தீயிட்டு தீ தடுப்பு கோடுகள் அமைத்தனர்.

 இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், கடும் வெயிலின் காரணமாகவும், சமூக விரோதிகளின் காரணமாக காட்டு தீ பரவுகிறது. இதனை தடுப்பதற்காக தீ தடுப்பு கோடுகள் அமைக்கப்படுகிறது.

 வனப்பகுதிக்கு தீ வைப்பவர்கள் குறித்து பொதுமக்களுக்கு தகவல் தெரிந்தால் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.


Next Story