வள்ளியூரில் 3 பேருக்கு கொரோனா; தெருவுக்கு சீல் வைப்பு


வள்ளியூரில் 3 பேருக்கு கொரோனா; தெருவுக்கு சீல் வைப்பு
x

வள்ளியூர் பகுதியில் ஒரே தெருவில் 3 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து அந்த தெருவுக்கு சீல் வைக்கப்பட்டது.

வள்ளியூர், மார்ச்:
வள்ளியூர் பெருமாள் கோவில் தெருவில் நேற்று 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அப்பகுதிக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது. மேலும் அங்கு பொதுமக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் விதமாக தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டுள்ளது. மேலும் நகர பஞ்சாயத்து நிர்வாக அலுவலர் கிறிஸ்டோபர்தாஸ் உத்தரவின் பேரில் சுகாதார ஆய்வாளர் ஆறுமுகம், மேற்பார்வையாளர் டேனியல் மற்றும் சுகாதார பணியாளர்கள் தெருவில் கிருமிநாசினி மருந்து தெளித்தனர்.

Next Story