கஞ்சா விற்ற பெண் உள்பட 6 பேர் கைது

கஞ்சா விற்ற பெண் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
சிவகாசி,
சிவகாசி, திருத்தங்கல் பகுதியில் கஞ்சா விற்பனையை கட்டுப்படுத்த துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபாகரன் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு சிவகாசி உட்கோட்டத்தில் பல இடங்களில் போலீசார் ரகசியமாக ஆய்வு நடத்தினர். இதில் சிவகாசி சாரதாநகரை சேர்ந்த சுப்புராஜ் (வயது 34), திருத்தங்கல் கே.கே.நகரை சேர்ந்த ஈஸ்வரன் (24), திருத்தங்கல் கே.கே.நகரை சேர்ந்த முனி யம்மாள் (45), சிவகாசி விவேகானந்தர் காலனியை சேர்ந்த கோகுல்நாத் (24), விஸ்வநத்தம் காமராஜர் நகரை சேர்ந்த சுரேஷ்குமார் (22), முருகையாபுரத்தை சேர்ந்த காளீஸ்வரன் (20) ஆகியோரிடம் இருந்து 2½ கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து இவர்கள் 6 பேரையும் கைது செய்தனர்.
Related Tags :
Next Story