கீழக்கரை கடல் பகுதியில் குறைந்து வரும் மீன்வளம்


கீழக்கரை கடல் பகுதியில் குறைந்து வரும் மீன்வளம்
x
தினத்தந்தி 1 April 2021 12:13 AM IST (Updated: 1 April 2021 12:13 AM IST)
t-max-icont-min-icon

கீழக்கரை கடல் பகுதியில் மீன்வளம் குறைந்து வருகிறது

கீழக்கரை,
கீழக்கரை, ஏர்வாடி மற்றும் சுற்றுப்புற கடற்கரையோர பகுதிகளில் ஏராளமான விசைப்படகுகளும், நாட்டுப் படகுகளும் உள்ளன. இங்கு மீன்பிடி தொழிலை நம்பி ஆயிரக்கணக்கானோர் உள்ளனர். இந்நிலையில் கீழக்கரை கடலில் கழிவு நீர் கலப்பதால் மீன் வளம் குறைந்து காணப்படுகிறது.. ஒரு சமயத்தில் கீழக்கரை பகுதி கடல் பகுதி மற்றும் நாளொன்றுக்கு 2 டன் மீன்கள் கிடைத்தது. தற்போது கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் மீனவர்களுக்கு முன்பு போன்று மீன்கள் கிடைப்பதில்லை. மிக குறைவான மீன்களே கிடைக்கிறது. பதிலாக கடல் பாசிகள் மற்றும் தாழை இலைகள் தான் வலையில் சிக்குகிறது. இதனால் ஏமாற்றத்துடன் கரை திரும்பி வருகின்றனர். பல்வேறு பொருளாதார நெருக்கடிகளை தாங்கி கடலுக்கு செல்லும் மீனவர்களுக்கு மீன்கள் கிடைக்காததால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக படகுகளை விற்று விட்டு வெளிநாடுகளுக்கு பணிக்கு சென்று விட்டனர். பலர் பல்வேறு தொழில்களுக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக படகுகள் கடற்கரையில் பயன்பாடின்றி நிறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து கீழக்கரையை சேர்ந்த மீனவர் பால முருகன் என்பவர் கூறும்போது, இப்பகுதி சாக்கடை கழிவுகள், தொழிற்சாலை கழிவுகள், எண்ணெய் கசிவு நீர், ரசாயன கழிவுகளால் பாதிப்பை சந்தித்து வருகிறது. செலவழித்த டீசலுக்கு கூட மீன்கள் கிடைப்பதில்லை. குறிப்பாக நாட்டுப்படகு மீனவர்கள் பெரும் பாதிப்பில் உள்ளனர். இதனால் படகுகளை விற்று விட்டு பலர் வெளிநாடு சென்று வருகின்றனர். அரசாங்கம் மீன்வர்களின் நல்வாழ்வுக்கு உதவி திட்டங்களை அதிகரிக்க வேண்டும் என்றார்.

Next Story