ஈரோடு முனிசிபல் சத்திரம் செல்லாண்டியம்மன் கோவில் குண்டம் விழா திரளான பக்தர்கள் தீ மிதித்தனர்
ஈரோடு முனிசிபல் சத்திரம் செல்லாண்டியம்மன் கோவில் குண்டம் விழாவில் திரளான பக்தர்கள் தீ மிதித்தனர்.
ஈரோடு முனிசிபல் சத்திரம் செல்லாண்டியம்மன் கோவில் குண்டம் விழாவில் திரளான பக்தர்கள் தீ மிதித்தனர்.
செல்லாண்டியம்மன் கோவில்
ஈரோடு நேதாஜி ரோடு முனிசிபல் சத்திரம் பகுதியில் பிரசித்திபெற்ற செல்லாண்டியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் குண்டம் விழா நடந்து வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான குண்டம் விழா கடந்த மாதம் 23-ந்தேதி தொடங்கியது. அன்று மாலை 4 மணிக்கு பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று தீர்த்தம் எடுத்து கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர். பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று இரவு 9 மணிக்கு பூச்சாட்டப்பட்டது.
24-ந்தேதி காலை 6 மணிக்கு குண்டம் இறங்கும் பக்தர்கள் தங்களது கையில் காப்பு கட்டி விரதத்தை தொடங்கினர். 25-ந்தேதி இரவு 7.30 மணிக்கு கொடி ஏற்றம் நடந்தது. 28-ந்தேதி அதிகாலை 4.30 மணிக்கு பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று பால்குடம் எடுத்து வந்தனர். 29-ந்தேதி இரவு 9 மணிக்கு பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து கோவிலுக்கு வந்தனர். நேற்று முன்தினம் இரவு 7.30 மணிக்கு குண்டம் பற்ற வைக்கப்பட்டது.
தீ மிதித்து நேர்த்திக்கடன்
முக்கிய நிகழ்ச்சியான குண்டம் விழா நேற்று அதிகாலை 4.30 மணிக்கு தொடங்கியது. முன்னதாக குண்டத்துக்கு சிறப்பு பூஜை நடந்தது. பின்னர் கோவில் பூசாரி முதலில் குண்டம் இறங்கினார். அவரை தொடர்ந்து காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் உள்பட ஏராளமானோர் குண்டம் இறங்கினார்கள். சிலர் கைக்குழந்தைகளுடன் குண்டம் இறங்கி தங்களது வேண்டுதலை நிறைவேற்றினார்கள்.
மதியம் 12 மணிக்கு பொங்கல் வைத்தல் மற்றும் மாவிளக்கு எடுத்தல் நிகழ்ச்சி நடந்தது. இரவு 9 மணிக்கு கோவில் பூசாரி அரிவாள் மீது ஏறி நின்று பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறினார். இன்று (வியாழக்கிழமை) மாலை 4.30 மணிக்கு மறுபூஜையும், இரவு 7.30 மணிக்கு கும்பம் ஆற்றில் விடுதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
Related Tags :
Next Story