கூட்டணி கட்சி பெண் தொண்டர்களுடன் சேர்ந்து எழும்பூர் தொகுதி வேட்பாளர் ஜான்பாண்டியன் மோட்டார் சைக்கிளில் சென்று பிரசாரம்


கூட்டணி கட்சி பெண் தொண்டர்களுடன் சேர்ந்து எழும்பூர் தொகுதி வேட்பாளர் ஜான்பாண்டியன் மோட்டார் சைக்கிளில் சென்று பிரசாரம்
x
தினத்தந்தி 1 April 2021 6:29 AM IST (Updated: 1 April 2021 6:29 AM IST)
t-max-icont-min-icon

கூட்டணி கட்சிகளின் பெண் தொண்டர்களுடன் சேர்ந்து எழும்பூர் தொகுதி வேட்பாளர் ஜான்பாண்டியன் மோட்டார் சைக்கிளில் சென்றபடி இரட்டை இலை சின்னத்தில் வாக்குகள் கேட்டார்.

சென்னை, 

அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் இடம ்பெற்று இருக்கிறது. இந்த கூட்டணியில் அந்த கட்சிக்கு எழும்பூர் (தனி) தொகுதி ஒதுக்கப்பட்டு இருக்கிறது. தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனத் தலைவர் பெ.ஜான் பாண்டியன் அதில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார்.

இதற்கான வேட்பு மனுதாக்கலை செய்ததில் இருந்து அவர் எழும்பூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அந்தவகையில் நேற்று மோட்டார் சைக்கிளில் சென்றபடி தொகுதி மக்களிடம் பிரசாரம் மேற்கொண்டார். நேற்று காலை பூபதி நகரில் பிரசாரத்தை தொடங்கிய அவர், புரசைவாக்கம் நெடுஞ்சாலை பகுதியில் நிறைவு செய்தார்.

மோட்டார் சைக்கிளில் சென்று வாக்கு சேகரிப்பு

பின்னர், மாலை 5.30 மணியளவில் எழும்பூர் தொகுதிக்குட்பட்ட புளியந்தோப்பு நெடுஞ்சாலை போலீஸ் நிலையத்துக்கு பின்புறம் பிரசாரத்தை ஆரம்பித்து, எல்.பி.சாலை காவல்துறை குடியிருப்பு அருகே நிறைவு செய்தார். முதலில் மோட்டார் சைக்கிளில் சென்று இரட்டை இலை சின்னத்தில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவர், அதனைத் தொடர்ந்து திறந்த வேனில் நின்றபடி இரட்டை விரலை காண்பித்தபடி பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது அவருடைய மனைவி பிரிசில்லா பாண்டியன், மகள் வினோலின் நிவேதா பாண்டியன் மற்றும் கூட்டணி கட்சிகளின் பெண் தொண்டர்கள் மோட்டார் சைக்கிளில் அணிவகுத்தபடி சென்று ஜான் பாண்டியனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தனர்.

சேவை செய்வதற்காக வந்திருக்கிறேன்

வாக்கு சேகரிப்பின்போது தொகுதி மக்கள் மத்தியில் அவர் பேசுகையில், ‘உங்களால் இதற்கு முன்பு தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த தொகுதி வேட்பாளர்களெல்லாம், என்ன செய்தார்கள்? என்பதை எண்ணி பாருங்கள். சுகாதாரக்கேடு, குடிநீர் வசதி இல்லை என இந்த தொகுதி சீர்கெட்டுப்போய ்இருக்கிறது. அதனை சீர்தூக்கி நிலைநாட்ட இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களியுங்கள். 1999-ல் தி.மு.க., பா.ஜ.க.வோடு கூட்டணி அமைத்து மந்திரி சபையில் அமர்ந்தார்கள். அப்போது பா.ஜ.க. தெரியவில்லையா?. இப்போது அ.தி.மு.க. கூட்டணி வைத்ததும் எதிர்க்கிறார்கள். உங்களுக்காக உழைக்கின்றவர்களுக்கு வாக்களிக்க வேண்டுமா? அல்லது உங்களை ஏமாற்றுகிறவர்களுக்கு வாக்களிக்க வேண்டுமா? என்பதை மக்கள் சிந்தித்து பாருங்கள். தி.மு.க. என்றால் சதி செய்வது தான். இந்த நிலையெல்லாம் உணர்ந்து, உங்களுக்கு சேவை செய்வதற்காக வாக்குகள் கேட்டு வந்திருக்கிறேன். இங்கு கட்டப்பஞ்சாயத்துக்கு இடமில்லை. ஏமாற்றுகிறவர்களுக்கு இடமில்லை. தி.மு.க.வுக்கு இடமே இல்லை என்று மக்கள் உணர்ந்து இரட்டை இலைக்கு வாக்களிக்க வேண்டும்' என்றார்.

Next Story