மாவட்ட செய்திகள்

அஸ்தம்பட்டியில் வாலிபருக்கு கத்திக்குத்து + "||" + The young man was stabbed

அஸ்தம்பட்டியில் வாலிபருக்கு கத்திக்குத்து

அஸ்தம்பட்டியில் வாலிபருக்கு கத்திக்குத்து
அஸ்தம்பட்டியில் வாலிபருக்கு கத்திக்குத்து விழுந்தது.
சேலம்:
சேலம் அஸ்தம்பட்டி ஜான்சன் பேட்டையை சேர்ந்தவர் மணி. இவருடைய மகன் ஜெயக்குமார் (வயது 28). இவர் நேற்று இரவு வீட்டில் இருந்தார். அப்போது அவரது உறவினர் பாஸ்கர் (40) அங்கு வந்தார். இதையடுத்து அவர்கள் இருவருக்கும் சொத்து பிரச்சினை தொடர்பாக தகராறு ஏற்பட்டது
இதில் ஆத்திரமடைந்த பாஸ்கர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஜெயக்குமார் வயிற்றில் குத்தினார். இதில் பலத்த காயமடைந்த ஜெயக்குமாரை அவரது உறவினர்கள் மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக அஸ்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து பாஸ்கரை கைது செய்தனர்.