கடலில் குதித்து தற்கொலைக்கு முயன்றவர் உயிர்தப்பினார்


கடலில் குதித்து தற்கொலைக்கு முயன்றவர் உயிர்தப்பினார்
x
தினத்தந்தி 9 April 2021 10:53 PM IST (Updated: 9 April 2021 10:53 PM IST)
t-max-icont-min-icon

பாம்பன் ரோடு பாலத்தின் தடுப்பு சுவரில் நின்று கடலில் குதித்து தற்கொலைக்கு முயன்றவர் உயிர்தப்பினார்

ராமேசுவரம், 
பாம்பன் ரோடு பாலத்தின் தடுப்பு சுவரில் நின்று நேற்று காலையில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் கடலில் குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
கடலில் குதித்து தத்தளித்து கொண்டிருந்த அந்த நபரை அருகில் சிறிய வல்லத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் காப்பாற்றி படகில் ஏற்றி கரைக்கு கொண்டு வந்தனர். 
ரோடு பாலத்தில் இருந்து கடலுக்குள் குதித்த அந்த நபருக்கு எந்த ஒரு காயமும் ஏற்படாமல் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். 
தொடர்ந்து அந்த நபரிடம் பாம்பன் காவல் நிலைய போலீசார் நடத்திய விசாரணையில் அவர் கர்நாடக மாநிலம் கோரப்புள் பகுதியைச் சேர்ந்த தாமோகர் (வயது 45) என்பதும் மனைவியுடன் சண்டையிட்டு வந்து குடும்ப பிரச்சினையால் பாம்பன் ரோடு பாலத்தில் இருந்து கடலில் குதித்து தற்கொலைக்கு முயன்றதும் தெரியவந்தது. 
தொடர்ந்து அவருக்கு போலீசார் அறிவுரைகூறி சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர். 

Next Story