நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம்
நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது.
அன்னவாசல்
அன்னவாசல் அருகே நார்த்தாமலையில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் கடந்த 28-ந் தேதி பூச்சொரிதல் விழா நடைபெற்றது. தொடர்ந்து கடந்த 4-ந் தேதி பங்குனி திருவிழா கொடியேற்றம் மற்றும் காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. நேற்று முன்தினம் பொங்கல் விழாவும், பாரி வேட்டை நிகழ்ச்சியும் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 12-ந் தேதி(திங்கட்கிழமை) நடைபெறுவதாக இருந்தது. அன்றைய தினம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறையும் அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக இன்று(சனிக்கிழமை) முதல் கோவில் திருவிழாக்கள் மற்றும் மதம் தொடர்புடைய நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக கோவில் திருவிழா ரத்து செய்யப்பட்டு உள்ளூர் விடுமுறையும் வாபஸ் பெறப்பட்டு அன்றைய தினம் வேலை நாளாக மாவட்ட நிர்வாகம் சார்பாக அறிவிக்கப்பட்டது. இதனால் 12-ந் தேதிக்கு பதிலாக 9-ந் தேதி தேரோட்டத்தை நடத்தி முடிக்க முடிவு செய்தனர்.அதன்படி நேற்று மாலை 2.45 மணியளவில் அலங்கரிக்கப்பட்ட தேரில் சிறப்பு அலங்காரத்தில் முத்து மாரியம்மன் எழுந்தருளினார். பின்னர் திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

Related Tags :
Next Story