கோவில் திருவிழா நடத்த அனுமதிக்க வேண்டும்


கோவில் திருவிழா நடத்த அனுமதிக்க வேண்டும்
x
தினத்தந்தி 9 April 2021 7:26 PM GMT (Updated: 9 April 2021 7:26 PM GMT)

கொரோனா விதிமுறைகளை பின்பற்றி கோவில் திருவிழா நடத்த அனுமதி வழங்க வேண்டும் என நாட்டுப்புற கலைஞர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

காரியாபட்டி,
கொரோனா விதிமுறைகளை பின்பற்றி கோவில் திருவிழா நடத்த அனுமதி வழங்க வேண்டும் என நாட்டுப்புற கலைஞர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. 
கலைஞர்கள் பாதிப்பு 
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பகுதிகளில் எண்ணற்ற நாட்டுப்புற கலைஞர்கள் வசித்து வருகின்றனர். 
இந்த பகுதியில் உள்ள நாட்டுப்புறக்கலைஞர்கள் தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்கள், வெளிநாடுகளுக்கு சென்று பிழைப்பு நடத்தி வருகின்றனர். சென்ற ஆண்டு கொரோனாவினால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதில் நாட்டுப்புற கலைஞர்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். 
கோரிக்கை மனு 
ஊரடங்கில் இருந்து தளர்வு ஏற்படுத்தப்பட்ட பிறகு நாட்டுப்புற கலைஞர்களுக்கு வேலைகள் ஓரளவு வர ஆரம்பித்தது. 
இந்தநிலையில் தற்போது கொரோனா பரவலை தடுக்கும் வகையில் கோவில்களில் திருவிழாக்கள் போன்ற நிகழ்ச்சிகள் நடத்த அரசு தடை விதித்து உள்ளது. 
இதையடுத்து நாட்டுப்புற கலைஞர்கள் சங்கம் முதல்-அமைச்சருக்கு கோரிக்கை மனு ஒன்று அனுப்பி உள்ளனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- 
கடந்த ஆண்டு முதல் கொரோனா ஊரடங்கினால் நாங்கள் போதுமான வருமானம் இன்றி தவித்து வருகிறோம்.
அனுமதி வேண்டும் 
இந்தநிலையில் தற்போது கோவில் திருவிழா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்த அரசு தடை விதித்துள்ளது. ஆதலால் கலைஞர்கள் நாங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளோம். 
ஆகவே கொரோனா விதிகளை பின்பற்றி கோவில் திருவிழா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்திக்கொள்ள அனுமதி வழங்க வேண்டும். 
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Next Story