நெடுங்காடு தொகுதி காங்கிரஸ் வேட்பாளருக்கு கொரோனா தொற்று உறுதியானது

நெடுங்காடு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
காரைக்கால்,
காரைக்கால் மாவட்டம் நெடுங்காடு தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. மாரிமுத்து போட்டியிடுகிறார். இவர் நடந்து முடிந்த தேர்தலில் தனது ஆதரவாளர்களுடன் தொகுதி முழுவதும் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மாரிமுத்து சோர்வுடன் காணப்பட்டார். மேலும் கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டது.
இதையடுத்து காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் நேற்று காலை அவர் கொரோனா பரிசோதனை செய்துகொண்டார். இதன் முடிவில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானதை தொடர்ந்து, மாரிமுத்து காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வருகிறார்.
Related Tags :
Next Story