பெரியநாயகி அம்மன் கோவில் மயான கொள்ளை நிகழ்ச்சி


பெரியநாயகி அம்மன் கோவில் மயான கொள்ளை நிகழ்ச்சி
x
தினத்தந்தி 12 April 2021 12:34 AM IST (Updated: 12 April 2021 1:15 AM IST)
t-max-icont-min-icon

அரியலூர் பெரியநாயகி அம்மன் கோவிலில் மயான கொள்ளை நிகழ்ச்சி நேற்று நடந்தது.

அரியலூர்,

அரியலூர் குறிஞ்சான் குளத்தெருவில் உள்ள பெரியநாயகி அம்மன் கோவிலில் மயான கொள்ளை நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதையொட்டி காளி வேடமிட்ட பக்தர்கள் பள்ளி ஏரிக்கரையில் உள்ள விநாயகர் கோவிலில் சக்தி அழைத்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர்.

பின்னர் பெரியநாயகியம்மனை அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் எழுந்தருள செய்து, ஜெயங்கொண்டம் சாலையில் உள்ள மயானத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு பூஜைகள் செய்யப்பட்டு ஆடு, கோழிகள் பலியிடப்பட்டன.

காளி வேடம் அணிந்து வந்த பக்தர்கள் அங்கிருந்தவர்களுக்கு காத்து, கருப்பு போன்றவற்றை விரட்டும் வகையில் முறத்தால் அடித்து திருஷ்டி கழித்தனர். பின்னர் பக்தர்கள் கலைந்து சென்றனர். ஆண்டுதோறும் மயான கொள்ளையையொட்டி, அங்கிருந்து முக்கிய வீதிகள் வழியாக அம்மன் ஊர்வலமாக வந்து கோவிலை அடையும். ஆனால் கொரோனா தொற்று காரணமாக இந்த ஆண்டு ஊர்வலம் நடைபெறவில்லை.

விழாவிற்கு வந்திருந்த அனைவரும் முக கவசம் அணிந்திருந்தனர். மேலும் 3 நாட்கள் நடைபெற வேண்டிய திருவிழா ஒரே நாளில் முடிந்தது.

Next Story