கோவில் பணியாளர்கள்-வணிகர்களுக்கு தடுப்பூசி

கொரோனா பரவல் எதிரொலியாக கோவில் பணியாளர்கள்-வணிகர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுப்பதற்கு, குடியிருப்பு பகுதிகளில் சிறப்பு முகாம் நடத்தி கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக நேற்று கோவில் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் முகாம், திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் வளாகத்தில் நடைபெற்றது.
இதற்கு மாநகராட்சி கமிஷனர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். நகர்நல அலுவலர் லட்சியவர்ணா முன்னிலை வகித்தார். இதில் 45 வயதுக்கு மேற்பட்ட கோவில் பணியாளர்கள் பலருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
இதேபோல் நாகல்நகர் அனைத்து வியாபாரிகள் பாதுகாப்பு நலச்சங்கத்தை சேர்ந்தவர்களுக்கு, நாகல்நகரில் தடுப்பூசி போடும் முகாம் நடந்தது. இதில் 45 வயதுக்கு மேற்பட்ட வணிகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.
மேலும் 2 ஜவுளிக்கடைகளில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு, அங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. இதேபோல் தினமும் சிறப்பு முகாம் நடத்தி தடுப்பூசி போடுவதற்கு திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர்.
Related Tags :
Next Story