கோவை ஆத்துப்பாலத்தில் பேக்கரி ஊழியர் மீது போலீசார் தாக்குதல்

கோவை ஆத்துப்பாலத்தில் பேக்கரி ஊழியர் மீது போலீசார் தாக்குதல் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
போத்தனூர்
கோவை காந்திபுரத்தில் செயல்பட்டு வந்த தனியார் உணவகத்தில் நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு மேல் வியாபாரம் செய்ததாக கூறி, காட்டூர் போலீஸ் சப்-இன்ஸ்பகெ்டர் கடை ஊழியர்களை தாக்கிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் அதிரடியாக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டார். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் கோவை ஆத்துப்பாலம் பகுதியில் உள்ள பேக்கரியை இரவு 10 மணிக்கு மேல் திறந்து வைத்ததாக கூறி, ஊழியரை போலீசார் தாக்கிய அழைத்து செல்லும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
இந்த சம்பவம் கடந்த மார்ச் மாதம் 29-ந் தேதி நடந்ததாக கூறப்படுகிறது. போலீசார் கடை ஊழியர்களை தாக்கிய சம்பவம் கடை உரிமையாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story