விலை வீழ்ச்சி எதிரொலி: ஏரியில் தக்காளியை கொட்டிய விவசாயிகள்

விலை வீழ்ச்சி எதிரொலியாக தக்காளியை ஏரியில் கூடை, கூடையாக விவசாயிகள் கொட்டி சென்றனர்.
கிருஷ்ணகிரி:
விலை வீழ்ச்சி எதிரொலியாக தக்காளியை ஏரியில் கூடை, கூடையாக விவசாயிகள் கொட்டி சென்றனர்.
தக்காளி விலை வீழ்ச்சி
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ராயக்கோட்டை, தேன்கனிக்கோட்டை, ஓசூர் உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் தக்காளி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் தக்காளி அறுவடை செய்யும் பணி நடக்கிறது. இதனால் மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது. இங்கிருந்து தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களுக்கும், ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய வெளி மாநிலங்களுக்கும் தக்காளி கொண்டு செல்லப்படுகிறது.
இந்த நிலையில் சமீப காலமாக விளைச்சல் அதிகமாக இருந்ததால் தக்காளி விலை வீழ்ச்சி அடைந்து. ஒரு கிலோ தக்காளி ரூ.5-க்கும் குறைவாக விற்பனை செய்யப்பட்டது. இதனால் கவலை அடைந்த விவசாயிகள் நேற்று காலை கிருஷ்ணகிரி அவதானப்பட்டி சிறுவர் பூங்கா அருகில் படகு இல்ல ஏரியில் தக்காளியை, கூடை, கூடையாக கொட்டி சென்றனர்.
போக்குவரத்து செலவு
இது குறித்து விவசாயிகள் கூறுகையில், தக்காளி விலை சமீப காலமாக வீழ்ச்சி அடைந்துள்ளது. விவசாயிகளுக்கு செலவு செய்த பணம் கூட கிடைப்பதில்லை. அறுவடை கூலி, போக்குவரத்து செலவு உள்ளிட்டவற்றிற்கு கையில் இருந்து கொடுக்க வேண்டிய நிலையே உள்ளது. விலை வீழ்ச்சியால் தக்காளியை அறுவடை செய்யாமல் தோட்டத்தில் விடவும் முடியவில்லை. நிலங்களை பராமரிக்க வேண்டி இருப்பதால் தக்காளியை அறுவடை செய்து அதை ஏரி மற்றும் சாலையோரம் கொட்டி வருகிறோம் என்று கவலையுடன் கூறினார்கள்.
Related Tags :
Next Story