நியாயவிலைக் கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்


நியாயவிலைக் கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
x

நாகையில் கோரிக்கைகளை வலியுறுத்தி நியாயவிலைக்கடை பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகப்பட்டினம்;
நாகையில் கோரிக்கைகளை வலியுறுத்தி நியாயவிலைக்கடை பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
ஆர்ப்பாட்டம்
நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நியாயவிலைக் கடை பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் தமிழ்ச்செழியன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சுரேஷ் கண்ணா முன்னிலை வகித்தார். மாநில நிர்வாக குழு உறுப்பினர் பாஸ்கரன், தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க மாவட்ட தலைவர் வெற்றிச்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்.
ஊதியம்
நியாயவிலை கடைகளுக்கு புழுங்கல் அரிசி 3 ரகமாக வழங்காமல், ஒரே ரகமாக வழங்க வேண்டும். திருக்குவளை வட்டம், வடக்கு பனையூர் மற்றும் திருவிடைமருதூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு, பல மாதங்களாக வழங்கப்படாமல் உள்ள ஊதியத்தை உடனே வழங்க வேண்டும். கொரோனா கால பலன்கள் அனைத்தையும் சீர் செய்து வழங்க வேண்டும். சிக்கல், நரிமணம், எரவாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ரேஷன் கடையில் பணிபுரியும் விற்பனையாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். அரசாணை நிலை எண் 25-ன் படி தேர்வு நிலை மற்றும் சிறப்பு நிலையில் உள்ள பணியாளர்கள் அனைவருக்கும் ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி  கோஷங்கள் எழுப்பினர்.

Next Story