இருதரப்பினர் மோதல்; பெண்கள் உள்பட 25 பேர் மீது வழக்கு


இருதரப்பினர் மோதல்; பெண்கள் உள்பட 25 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 16 April 2021 12:44 AM IST (Updated: 16 April 2021 12:44 AM IST)
t-max-icont-min-icon

மீன்சுருட்டி அருகே இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக பெண்கள் உள்பட 25 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, 6 பேரை கைது செய்தனர்.

மீன்சுருட்டி:

மோதல்
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள தென்னவநல்லூர் காலனி தெருவை சேர்ந்தவர் வீராசாமி (வயது 54). கூலித்தொழிலாளி. இவருக்கும், அதே தெருவை சேர்ந்த ராஜேந்திரன் என்ற அரசனுக்கும்(54) முன்விரோதம் இருந்து வந்ததாக தெரிகிறது. நேற்று முன்தினம் இரவு ராஜேந்திரனும், அவரது மகன் ராஜசேகரும், மோட்டார் சைக்கிளில் சென்ற வீராசாமியின் உறவினர் மணிவேலை வழிமறித்து முன்விரோதம் காரணமாக அரிவாளால் தாக்கி உள்ளனர்.
இதை தடுக்க வந்த வீராசாமியின் உறவினர்கள் சத்தியமூர்த்தி மற்றும் சிவகுமார் ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து இருதரப்பினரும் மோதிக்கொண்டதில் ராஜேந்திரனும் காயமடைந்தார். காயமடைந்தவர்கள் அனைவரும் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
கைது
இதுகுறித்து வீராசாமி கொடுத்த புகாரின்பேரில் ராஜேந்திரன் என்ற அரசன், அவரது மகன் ராஜசேகர், அவர்களுடைய உறவினர்கள் பிரகாஷ், கவியரசன், வேல்முருகன், பாலமுருகன், சுரேஷ், சுந்தரபாண்டி, விஜய், ராஜ்குமார், விக்கி உள்ளிட்ட 11 பேர் மீது மீன்சுருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) ஜெகதீசன் வழக்குப்பதிவு செய்து, அதில் ராஜசேகர், பிரகாஷ், வேல்முருகன் மற்றும் சுரேஷ் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.
மேலும் ராஜேந்திரன் என்ற அரசன் கொடுத்த புகாரின்பேரில் மணிவேல், வடிவேல், வீராசாமி, சரவணன், சத்தியமூர்த்தி, சந்திரசேகர், சிவகுமார், தமயந்தி, லலிதா, சுகன்யா, தங்கவேலு, ராசாத்தி, ராஜேந்திரன், ஜான்சிராணி உள்ளிட்ட 14 பேர் மீது இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு செய்து, வடிவேல், ராஜேந்திரன் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story