ேதரோட்டத்துக்கு அனுமதி பெற்று தர அமைச்சரிடம் பக்தர்கள் கோரிக்கை
புளியம்பட்டி ஆயிரங்கண் மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி தேரோட்டம் நடத்த அனுமதி பெற்று தர அமைச்சரிடம் பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.
அருப்புக்கோட்டை,
புளியம்பட்டி ஆயிரங்கண் மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி தேரோட்டம் நடத்த அனுமதி பெற்று தர அமைச்சரிடம் பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.
தேரோட்டம்
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை புளியம்பட்டி ஆயிரங்கண் மாரியம்மன் கோவில் பங்குனி திருவிழா கடந்த 6-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இ்ந்த கோவிலில் மற்ற நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி வழங்கிய தமிழக அரசு கொேரானா பரவல் காரணமாக தேரோட்டம் நடத்த மட்டும் அனுமதி மறுத்தது. இந்நிலையில் தேரோட்டம் நடத்தி, வீதிகள் வழியாக சுற்றி வர அனுமதி அளிக்க வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்கள் கோவில் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜியின் காரை மறித்து தேரோட்டத்திற்கு அனுமதி வாங்கி தரவேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
அமைச்சரிடம் கோரிக்கை
அவர்களின் கோரிக்கையை ஏற்று உடனடியாக அதிகாரிகளை தொடர்பு கொண்டு பொதுமக்களின் கோரிக்கை குறித்து கூறினார்.
பின்னர் அதிகாரிகளிடம் கூறி உரிய நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கூறினார். இதையடுத்து மக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story