வாலிபரை கத்தியால் குத்திய 2 பேர் கைது


வாலிபரை கத்தியால் குத்திய 2 பேர் கைது
x
தினத்தந்தி 16 April 2021 3:28 AM IST (Updated: 16 April 2021 3:28 AM IST)
t-max-icont-min-icon

வாலிபரை கத்தியால் குத்திய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர்
திருப்பூர் சாமுண்டிபுரத்தை சேர்ந்தவர் ராம்பிரபு (வயது 24). இவர் நேற்று முன்தினம் காலை சாமுண்டிபுரத்தில் தலை மற்றும் கழுத்தில் குத்திக்குத்து காயத்துடன் கிடந்தார். 15.வேலம்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் ராம்பிரபுவை 5 பேர் கொண்ட கும்பல் கத்தியால் குத்திவிட்டு தப்பியது தெரியவந்தது. போலீசார் நடத்திய விசாரணையில், ராம்பிரபு மீது ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பதும், குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டு சமீபத்தில் தான் அவர் வெளியே வந்துள்ளார். இந்தநிலையில் இந்த கத்திக்குத்து சம்பவம் நடந்துள்ளது. அவரை கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து 15வேலம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த சம்பவம் தொடர்பாக சாமுண்டிபுரத்தை சேர்ந்த சுரேஷ் (20), தமிழ்செல்வன் (20) ஆகியோரை பிடித்தனர். விசாரணையில் ராம்பிரபு, சுரேசின் நண்பரிடம் பணம் பறித்து தகராறில் ஈடுபட்டதும், அதற்கு பழிவாங்கும் வகையில் சுரேஷ் தரப்பினர் வந்து ராம்பிரபுவை கத்தியால் குத்தியதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து சுரேஷ், தமிழ்செல்வன் ஆகிய 2 பேரையும் போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும் 3 பேரை தேடி வருகிறார்கள். 

Next Story