கம்பம் உழவர்சந்தையில் விவசாய கண்காட்சி
பெரியகுளம் அரசு தோட்டக்கலை கல்லூரியில் இறுதியாண்டு மாணவிகள் சார்பில் கம்பம் உழவர்சந்தையில் விவசாய கண்காட்சி நடந்தது.
தேனி :
தேனி மாவட்டம் பெரியகுளம் அரசு தோட்டக்கலை கல்லூரியில் இறுதியாண்டு மாணவிகள் சார்பில் கிராம தங்கல் திட்டத்தின்கீழ் கம்பம் உழவர்சந்தையில் விவசாய கண்காட்சி மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
கண்காட்சியில் சோலார் பயன்பாடு, காளான் உற்பத்தி, கம்பம் பள்ளத்தாக்குப்பகுதியில் விளையக்கூடிய காய், கனிகள், நீர்மேலாண்மை குறித்து விளக்கினர்.
இந்நிகழ்ச்சிக்கு கம்பம் தோட்டக்கலைத்துறை இயக்குனர் பிரியதர்ஷினி தலைமை தாங்கினார்.
உழவர் சந்தை நிர்வாக அலுவலர் கண்ணதாசன், சித்தமருத்துவர் கலையமுதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
உதவி வேளாண் அலுவலர்கள், உழவர் சந்தை விவசாயிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இதேபோல் கம்பம் புதுப்பட்டியில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற விவசாய கண்காட்சியிலும் தோட்டக்கலைத்துறை அதிகாரிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story