கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அதிகாரி ஆய்வு


கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அதிகாரி ஆய்வு
x
தினத்தந்தி 16 April 2021 11:46 PM IST (Updated: 16 April 2021 11:46 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அதிகாரி ஆய்வு செய்தார்.

நொய்யல்
புகளூர் மற்றும் வேலாயுதம்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட வீடுகள் மற்றும் தெருக்களை கரூர் மாவட்ட சுகாதாரபணிகள் துணை இயக்குனர் சதீஷ்குமார் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது புகளூர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேரும், கூலக்கவுண்டனூர் பகுதியை சேர்ந்த ஒருவர், மேலும் மலை நகர், முல்லை நகர், வள்ளுவர் நகர், ஹை ஸ்கூல் மேடு, தளவாபாளையம், கந்தசாமி தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அடைக்கப்பட்டிருந்த வீதிகள், சாலைகளை ஆய்வு செய்தார். பாதிக்கப்பட்ட இடங்களை யாரும் செல்லாதவாறு அடைக்கப்பட்டுள்ளதா என்றும் பார்வையிட்டார்.பின்னர் தளவாபாளையம் குமாரசாமி கல்லூரியில் செயல்பட்டு வரும் மருத்துவ முகாமை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது ஓலப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் அனிதா,் சுகாதார ஆய்வாளர் வீரமணி மற்றும் சுகாதார பணியாளர்கள் உடனிருந்தனர்.

Next Story