தூத்துக்குடியில் போலீசாருக்கு கொரோனா தடுப்பு கசாயம்


தூத்துக்குடியில் போலீசாருக்கு கொரோனா தடுப்பு கசாயம்
x
தினத்தந்தி 21 April 2021 7:12 PM IST (Updated: 21 April 2021 7:12 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் போலீசாருக்கு கொரோனா தடுப்பு கசாயம் வநியோகம் செய்யப்பட்டது.

தூத்துக்குடி:
மாப்பிள்ளையூரணி அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஆயுர்வேத மருத்துவப்பிரிவு சார்பில் கொரோனாவை தடுத்திடும் நோக்கில் அரசுத்துறையினர் மற்றும் பொதுமக்களுக்கு கொரோனா தொற்று தடுப்பு கசாயம் போன்றவை வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி, தூத்துக்குடியில் தாளமுத்துநகர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வரும் போலீசாருக்கு  மாப்பிள்ளையூரணி ஆரம்ப சுகாதாராதநிலையம் ஆயுர்வேத மருத்துவ அலுவலர் டாக்டர் ஜான்மோசஸ் தலைமையில் கொரோனா தடுப்பு கசாயம் வழங்கப்பட்டது. இதில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் தர்மராஜ், நவநீதன், ஏட்டுக்கள் சண்முககனி, முனியசாமி, பிரசாத், மருத்துவ பணியாளர்கள், போலீசார் உட்பட பலர் கலந்துகொண்டனர். தொடர்ந்து மாப்பிள்ளையூரணி சுகாதார நிலையத்திற்கு வந்த நோயாளிகள் மற்றும் பொதுமக்களுக்கும் கொரோனா தடுப்பு கசாயம் மற்றும் பொடியும் வழங்கப்பட்டது.

Next Story