பெட்டிக்கடைக்காரரிடம் தகராறு; வாலிபர் கைது


பெட்டிக்கடைக்காரரிடம் தகராறு; வாலிபர் கைது
x
தினத்தந்தி 22 April 2021 3:23 AM IST (Updated: 22 April 2021 3:23 AM IST)
t-max-icont-min-icon

ஆழ்வார்குறிச்சி அருகே பெட்டிக்கடைக்காரரிடம் தகராறு செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

கடையம்:
ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள கீழஆம்பூர் தங்கம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம். இவர் அங்கு பெட்டிக்கடை நடத்தி வருகிறார். அதே ஊரை சேர்ந்த பிரமாட்சி மகன் கருத்தப்பாண்டி (21) என்பவர் பாலசுப்பிரமணியனிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் ஆழ்வார்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து கருத்தப்பாண்டியை கைது செய்தனர்.



Next Story