தயார் நிலையில் கொரோனா வார்டு

தயார் நிலையில் கொரோனா வார்டு உள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
கொரோனா பாதிப்பு வேகமாக பரவி வரும் நிலையில் அரசின் சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டு வருகிறது. தடுப்பு ஊசிகளைப் போட்டுக் கொள்ளுமாறு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத் தும் நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன. அந்த வகை யில் ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் கொேரானா பாதிப்பு அறிகுறியுடன் வரு பவர்களை தங்க வைத்து முதல்கட்ட பரிசோதனை மேற்கொள்ள வசதி யாக தனியாக வார்டு அமைக்கப்பட்டு உள்ளது. ஒரே நேரத்தில் 10 பேர் வரை பரிசோதனைகளை மேற்கொள்ள வசதியாக 10 படுக்கை வசதிகளும் தயார் நிலையில் உள்ளன. இதுகுறித்து தலைமை மருத்துவர் காளிராஜ் கூறியதாவது:- கோவிட் பாதிப்புடன் அறிகுறியுடன் வருபவர்களுக்கு முதற்கட்ட பரிசோதனை மேற்கொள்ள வசதியாக தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது. இதில் சுமார் 10 படுக்கை வசதிகளும் தயாராக உள்ளன. தொற்று உறுதியானால் மேல்சிகிச்சைக்காக அவர்கள் ராஜபாளையம் அல்லது சிவகாசி போன்ற மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story