குழியில் விழுந்த மாடு மீட்பு

ராஜபாளையத்தில் குழியில் விழுந்த பசுமாட்டை உயிருடன் மீட்டனர்.
ராஜபாளையம்,
ராஜபாளையம் நகருக்கு உட்பட்ட 42 வார்டுகளிலும் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை திட்ட பணிகளுக்காக ஆங்காங்கே 8 அடி வரையிலும் பள்ளங்கள் தோண்டப்படுகிறது. இப்பள்ளங்களை ஊழியர்கள் சரிவர மூடுவதில்லை எனவும் குறிப்பிட்ட காலத்தில் பணிகள் முடிக்கப்படுவதில்லை எனவும் பொது மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்தநிலையில் செவல்பட்டி தெரு பகுதியில் தாமிரபரணி கூட்டு குடிநீர் குழாய் பதிக்கும் பணிகாக கடந்த சில தினங்களுக்கு முன் குழி தோண்டப்பட்டிருந்தது. பணிகள் முழுமையடையாத நிலையில் இந்த குழியில் அந்த வழியாக சென்ற பசு மாடு ஒன்று எதிர்பாராத விதமாக சிக்கி கொண்டது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் மீட்பு குழுவினருக்கு தகவல் அளித்தனர். பின்னர் அப்பகுதி இளைஞர்கள் மற்றும் மீட்பு குழுவினர் மாட்டை உயிருடன் மீட்டனர்.
ராஜபாளையத்தில் குழியில் விழுந்த பசுமாட்டை உயிருடன் மீட்டனர்.
Related Tags :
Next Story