நள்ளிரவில் வீட்டின் கதவை உடைத்து மூதாட்டியிடம் 7 பவுன் நகை பறிப்பு

நள்ளிரவில் வீட்டின் கதவை உடைத்து மூதாட்டியிடம் 7 பவுன் நகை பறிப்பு
x
தினத்தந்தி 24 April 2021 1:57 AM IST (Updated: 24 April 2021 1:57 AM IST)
t-max-icont-min-icon

நள்ளிரவில் வீட்டின் கதவை உடைத்து மூதாட்டியிடம் 7 பவுன் நகை யை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.

ஜீயபுரம், 
நள்ளிரவில் வீட்டின் கதவை உடைத்து மூதாட்டியிடம் 7 பவுன் நகை யை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.
குழுமணி அக்ரஹாரத்தை சேர்ந்தவர் சரஸ்வதி(வயது 73). இவர் நேற்று முன்தினம் இரவில் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது, வீட்டின் கதவை கடப்பாறையால் நெம்பி உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் மேஜையில் இருந்த 2 பவுன் மோதிரங்களை திருடிக்கொண்டு செல்ல முயன்றனர். அப்போது சத்தம் கேட்டு சரஸ்வதி எழுந்ததால், அவர் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியையும் பறித்து சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் ஜீயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story