நெல்லையில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

நெல்லையில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை:
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து நெல்லை பாளையங்கோட்டை முருகன்குறிச்சி சித்தா கல்லூரி எதிரே நேற்று மக்கள் அதிகாரம் அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மண்டல ஒருங்கிணைப்பாளர் அன்பு தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறுகையில், "தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மக்களின் பெரும் போராட்டத்துக்கு பிறகு மூடப்பட்டு உள்ளது. இதற்காக 15 பேர் உயிர் தியாகம் செய்து உள்ளனர். அந்த ஆலையை பிராண வாயு தயாரிப்பு என்ற பெயரில் திறக்க முயற்சிகள் நடக்கிறது. இதற்கு தமிழக அரசு அனுமதி அளிக்கக்கூடாது" என்றார்.
இந்த போராட்டத்தில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கின்சன், திராவிட தமிழர் கட்சி மாவட்ட பொதுச் செயலாளர் கதிரவன், மாவட்ட செயலாளர் திருக்குமரன், ஆதித்தமிழர் கட்சி மாவட்ட பொறுப்பாளர் மூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story