சாலையோர கிணற்றுக்கு தடுப்பு சுவர்

சாலையோர கிணற்றுக்கு தடுப்பு சுவர்
குண்டடம்
குண்டடத்தை அடுத்துள்ள மேட்டுக்கடையில் இருந்து ஜல்லிபட்டி செல்லும் மெயின் ரோட்டில் தினசரி நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த ரோட்டில் தும்பலப்பட்டிக்கும்-காணிக்கம்பட்டி பிரிவுக்கும் இடையில் பவர் கிரீட் லைன் செல்லும் இடத்தின் அருகே தனியாருக்கு சொந்தமான விவசாய கிணறு ரோட்டின் ஓரத்தில் உள்ளது. இந்த ரோட்டில் செல்லும் வாகனங்கள் அந்த இடத்தில் விலகிச் செல்லும் போது கிணற்றைக் கண்டு டிரைவர்கள் ஒருவித பீதியுடனே செல்கின்றனர்.
எனவே ஏதேனும் அசம்பாவிதம் நடக்கும் முன்னர் இந்த கிணற்றுக்கும் ரோட்டுக்கும் இடையில் தடுப்பு சுவர் அல்லது இரும்பு தடுப்பு அமைக்க நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டுனர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story