ரிஷிவந்தியம் அருகே மண் கடத்த முயற்சி 2 வாலிபர்கள் கைது

ரிஷிவந்தியம் அருகே மண் கடத்த முயற்சி 2 வாலிபர்கள் கைது
ரிஷிவந்தியம்
ரிஷிவந்தியத்தை அடுத்த காட்டுசெல்லூர் கிராமத்தில் உள்ள ஏரியில் இருந்து வண்டல் மண் கடத்தி செல்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ரிஷிவந்தியம் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மணி தலைமையில் போலீசார் காட்டு செல்லூர் கிராமத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது ஏரியில் இருந்து பொக்லைன் எந்திரம் மூலம் 2 டிராக்டர் டிப்பர்களில் மண்அள்ளிக்கொண்டிருந்ததை பார்த்தனர்.
இது தொடர்பாக பொக்லைன் எந்திர டிரைவர் அதே கிராமத்தை சேர்ந்த வெங்கடேஷ்(வயது 26), உரிமையாளர் பாண்டியன்(45), டிராக்டர் டிப்பர் டிரைவர் முத்து(32) உரிமையாளர் இளங்கோ(29) மற்றும் ரகுபதி(45), ஜெயபால் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவுசெய்து வெங்கடேஷ், முத்து ஆகியோரை கைது செய்தனர். மேலும் பொக்லைன் எந்திரம், டிராக்டர் டிப்பர்களையும் பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story