மாவட்ட செய்திகள்

ஒரே நாளில் 106 பேருக்கு கொரோனா + "||" + Corona

ஒரே நாளில் 106 பேருக்கு கொரோனா

ஒரே நாளில் 106 பேருக்கு கொரோனா
சிவகங்கை மாவட்டத்தில் ஒரே நாளில் 106 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. எனவே கொரோனா பரவலை தடுக்க முககவசம் உயிர் கவசம் என்பதை பொதுமக்கள் உணர வேண்டும் என சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
சிவகங்கை,
சிவகங்கை மாவட்டத்தில் ஒரே நாளில் 106 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. எனவே கொரோனா பரவலை தடுக்க முககவசம் உயிர் கவசம் என்பதை பொதுமக்கள் உணர வேண்டும் என சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

106 பேருக்கு கொரோனா

சிவகங்கை மாவட்டத்தில் 2-வது முறையாக கொரோனா தொற்று படிப்படியாக அதிகரித்து வருகிறது. முதலில் ஒற்றை இலக்க எண்ணாக கொரோனா தொற்று தொடங்கி படிப்படியாக இரட்டை இலக்க எண்ணை எட்டி பிடித்தது. இந்த நிலையில் நேற்று 3 இலக்க எண்ணை எட்டியது. நேற்று ஒரே நாளில் 106 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. குறிப்பாக சிவகங்கை, சிங்கம்புணரி, தேவகோட்டை, காரைக்குடி, திருப்பத்தூர் ஆகிய பகுதிகளில் கொரோனா தொற்று அதிகரித்து உள்ளது. சிவகங்கை மாவட்டத்தை பொறுத்தவரை மொத்தம் 8 ஆயிரத்து 191 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

75 பேர் குணமடைந்தனர்

தற்போது கொரோனா தாக்கி அரசு ஆஸ்பத்திரி, தனியார் மருத்துவமனை, வீட்டு தனிமையில் உள்ளவர்கள் உள்பட 520 பேர் சிகிச்சையில் உள்ளனர். இந்த நிைலயில் கொரோனா பாதித்து 75 பேர் சிகிச்சை பெற்று பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தை பொறுத்தவரை நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் அதை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

முககவசம் உயிர்கவசம்

இது குறித்து சுகாதாரத்துறையினர் கூறியதாவது:-
கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். முககவசம் உயிர் கவசம் என்பதை உணர வேண்டும். வீட்டை விட்டு வெளியே வரும் போது கட்டாயம் முககவசம் அணிய வேண்டும். பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். வெளியே சென்று விட்டு வீடு திரும்பும் போது அவசியம் கிருமிநாசினி கொண்டு கைகளை கழுவ வேண்டும். இதை கடைபிடித்தால் நிச்சயம் கொரோனா தாக்குதலில் இருந்து நாம் விடுபடலாம். எனவே கொரோனா பரவலை தடுக்க அனைவரும் ஒத்துழைப்பு தரும்படி கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா 3-வது அலைக்கு ஆதாரம் இல்லாவிட்டாலும் ஆக்சிஜன் உற்பத்தியை தொடர வேண்டும்
கொரோனா 3-வது அலைக்கு ஆதாரம் இல்லாவிட்டாலும் அதை எதிர்கொள்ள ஆக்சிஜன் உற்பத்தியை தொடர வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
2. நாளுக்கு நாள் குறைந்து வருகிறது: தமிழகத்தில் 6,895 பேருக்கு கொரோனா
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. நேற்று 6,895 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
3. “இப்போது கொரோனா மீது கவனம் செலுத்துவதே எனது நோக்கம்” - ராகுல் காந்தி
அரசியலில் நடப்பதை பற்றி நேரம் வரும் போது விவாதிப்பேன் என செய்தியாளர்களிடம் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
4. மதுரையில் புதிதாக 125 பேருக்கு கொரோனா
மதுரையில் புதிதாக 125 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
5. மேலும் 98 பேருக்கு கொரோனா
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 98 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. பலி எண்ணிக்கை 520 ஆக உயர்ந்துள்ளது.