வெவ்வேறு விபத்தில் 4 பேர் படுகாயம்

வெவ்வேறு விபத்தில் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
கந்தர்வகோட்டை, ஏப்.29-
கந்தர்வகோட்டை அருகே உள்ள சுந்தம்பட்டி மருங்கூரணி கிராமத்தை சேர்ந்தவர் ராஜ். இவரது மனைவி சின்ன பொண்ணு (வயது 65). சம்பவத்தன்று இவர் காட்டு நாவல் பஸ் நிறுத்தம் அருகே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது திருமணஞ்சேரி சவேரியார் பட்டி கிராமத்தைச் சேர்ந்த மகிமை ராஜ் மகன் ஆரோக்கிய விஷால் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் படுகாயம் அடைந்த சின்னப்பொண்ணு சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து கந்தவர்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
அன்னவாசல் கொடிக்கால் தெருவை சேர்ந்த ஜெயா (55) சற்று மனநலம் பாதிக்கப்பட்ட இவர் நேற்று அன்னவாசல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே சாலையை கடக்க முயன்றார். அப்போது, அந்த வழியாக வந்த லாரி அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அன்னவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆவூர் அருகே உள்ள தெற்கு புதுப்பட்டியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (60). இவர் நேற்று காலை தனது வீட்டின் எதிரே மாத்தூர் இலுப்பூர் சாலையை கடக்க முயன்றார். அப்போது அவ்வழியே மோட்டார் சைக்கிளில் வந்த ஆம்பூர்பட்டி ஜோசப் மகன் ராஜமாணிக்கம் (22) ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மோதியது. இந்த விபத்தில் இருவரும் படுகாயம் அடைந்தனர். இது குறித்து மாத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story