தடுப்பூசி மூலம் கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் அண்ணாமலை பேட்டி

தடுப்பூசி மூலம் கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் அண்ணாமலை கூறினார்.
கரூர்
அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் கே.அண்ணாமலை நேற்று வாக்கு எண்ணும் மையமான தளவாபாளைம் எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு எந்திரங்கள் கண்காணிப்பு கேமரா மூலம் காண்காணிக்கப்படுவதை பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில்,வாக்கு எண்ணும் மையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கரூர் உள்பட 4 சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்களை கண்காணிப்பு கேமரா மூலம் சிறப்பாக கண்காணித்து வருகின்றனர்.வாக்கு எண்ணிக்கை சம்பந்தமாக அரசு சொல்கின்ற அனைத்து விஷயங்களையும் முழு மனதோடு முழுமையாக கடைப்பிடிப்போம். 100 சதவீதம் ஒத்துழைப்பு வழங்குவோம். சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கொரோனா தடுப்பூசி முன்பதிவு தொடங்குகிறது. இதில் நானும் முன்பதிவு செய்து கொள்ள போகிறேன். 18-வயதிற்கு மேற்பட்டவர்கள் அனைவரும் முன்பதிவு செய்து கொண்டு, கொரோனா தடுப்பூசி கண்டிப்பாக போட்டு கொள்ள வேண்டும். 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் தயவு செய்து கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். கொரோனா தடுப்பூசி மூலம்தான் கொரோனாவின் அலையை கட்டுப்படுத்த முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story