மாவட்ட செய்திகள்

முககவசம் அணியாத 144 பேரிடம் அபராதம் வசூல் + "||" + fined

முககவசம் அணியாத 144 பேரிடம் அபராதம் வசூல்

முககவசம் அணியாத 144 பேரிடம் அபராதம் வசூல்
முககவசம் அணியாத 144 பேரிடம் அபராதம் வசூல் செய்யப்பட்டது.
ராமநாதபுரம், 
கொரோனா பரவலை தடுக்கும் வகையில் ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை சார்பில் முககவசம் அணியாமல் செல்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் உத்தரவின்படி ராமநாதபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு வெள்ளைத்துரை மேற்பார்வையில் போலீசார் நேற்று முன்தினம் அதிரடி சோதனை மேற்கொண்டனர். சாலைகளில் முககவசம் அணியாமல் வாகனம் ஓட்டி வந்தவர்களை நிறுத்தி அரசின் உத்தரவின்படி அபராதம் விதித்ததோடு முககவசம் அணிவதன் அவசியம் குறித்து அறிவுரை வழங்கினர். இவ்வாறு நேற்றுமுன்தினம் ஒரே நாளில் ராமநாதபுரம் பகுதியில் போலீசார் நடத்திய சோதனையில் 144 பேரிடம் முககவசம் அணியாததற்காக அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. மாவட்டத்தில் கொரோனா விதிகளை மீறிய 13107 பேரிடம் இருந்து ரூ.28 லட்சம் அபராதம் வசூல்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா விதிமுறைகளை மீறிய 13ஆயிரத்து 107 பேரிடம் இருந்து ரூ.28 லட்சத்து 26 ஆயிரத்து 900 அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் தெரிவித்துள்ளார்.