திருப்பூரில் நாளை மறுநாள் வாக்கு வாக்கு எண்ணிக்கையில் ஈடுபட 3 ஆயிரம் பேர் தயாராக உள்ளனர். மருத்துவ பரிசோதனை செய்ய 10 டாக்டர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது.

திருப்பூரில் நாளை மறுநாள் வாக்கு வாக்கு எண்ணிக்கையில் ஈடுபட 3 ஆயிரம் பேர்  தயாராக உள்ளனர். மருத்துவ பரிசோதனை செய்ய 10 டாக்டர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது.
x
தினத்தந்தி 29 April 2021 10:18 PM IST (Updated: 29 April 2021 10:18 PM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில் நாளை மறுநாள் வாக்கு வாக்கு எண்ணிக்கையில் ஈடுபட 3 ஆயிரம் பேர் தயாராக உள்ளனர். மருத்துவ பரிசோதனை செய்ய 10 டாக்டர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது.

திருப்பூர்
திருப்பூரில் நாளை மறுநாள் வாக்கு வாக்கு எண்ணிக்கையில் ஈடுபட 3 ஆயிரம் பேர்  தயாராக உள்ளனர். மருத்துவ பரிசோதனை செய்ய 10 டாக்டர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. 
3 ஆயிரம் பேர் தயார்
தமிழகம் முழுவதும் கடந்த 6-ந் தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. வாக்குப்பதிவு முடிவடைந்ததும் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையமான திருப்பூர் பல்லடம் ரோட்டில் உள்ள எல்.ஆர்.ஜி. அரசு மகளிர் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது. தொகுதிவாரியாக எந்திரங்கள் அனைத்தும் பிரித்துவைக்கப்பட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாளைமறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) வாக்குகள் எண்ணப்பட உள்ளன. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் அதிகாரிகள் செய்து வருகிறார்கள். அதன்படி வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடுகிறவர்களுக்கு பரிசோதனை செய்யப்படுகிறது. இதற்கிடையே வாக்கு எண்ணும் மையத்தில் 3 ஆயிரம் பேர் பணியில் ஈடுபட தயாராக உள்ளனர்.
பாதுகாப்பு ஏற்பாடுகள்
இது குறித்து தேர்தல் அதிகாரிகள் கூறியதாவது:-
வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடுகிற பணியாளர்கள், பூத் ஏஜெண்டுகள் மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிற போலீசார் என மொத்தம் 3 ஆயிரம் பேர் தயாராக இருக்கிறார்கள். இவர்களுக்கு தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு விட்டது. இதுபோல் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து 3 ஆயிரம் பேர் ஒரே இடத்தில் இருப்பதால் சமூக இடைவெளியுடன் இருக்கைகள் உள்ளிட்டவைகளும் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், உணவு மற்றும் குடிநீர், சுகாதார வளாகம் என அனைத்தும் செய்யப்பட்டு விட்டது. தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி வாக்குகள் எண்ணுவதற்கான அனைத்து பணிகளையும் சிறப்பாக செய்துள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
 டாக்டர்கள் குழு 
 வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு குறிப்பிட்ட எண்ணிக்கையில் பலர் வருவார்கள் என்பதால், அங்கு கொரோனா பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது. இதற்காக 10 டாக்டர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. ஒரு குழுவிற்கு ஒரு டாக்டர் தலைமையில் நர்சுகள் மற்றும் பணியாளர்கள் இருப்பார்கள். இவர்கள் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வருகிறவர்களுக்கு கிருமிநாசினி வழங்குவது, உடல் வெப்ப பரிசோதனை செய்வது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வார்கள்.
 இந்நிலையில் வாக்கு எண்ணும் மையத்தில் பணியில் ஈடுபடுகிற பூத் ஏஜெண்டுகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இவர்களுக்கு 24 மணி நேரத்தில் கொரோனாபரிசோதனை முடிவுகள் தெரிவிக்கப்படும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Next Story