தாசில்தார் அலுவலக வளாகத்தில் உலா வந்த காட்டெருமை


தாசில்தார் அலுவலக வளாகத்தில் உலா வந்த காட்டெருமை
x
தினத்தந்தி 30 April 2021 11:20 PM IST (Updated: 1 May 2021 12:20 AM IST)
t-max-icont-min-icon

தாசில்தார் அலுவலக வளாகத்தில் காட்டெருமை புகுந்ததால் ஊழியர்களும், பொதுமக்களும் அச்சமடைந்தனர்.

கோத்தகிரி,

கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று மதியம் 12 மணியளவில் தாசில்தார் அலுவலக வளாகத்திற்குள் காட்டெருமை ஒன்று புகுந்தது. இதனால் அங்கு வந்த ஊழியர்களும், பொதுமக்களும் அச்சமடைந்தனர். 

பின்னர்  அங்குள்ள வருவாய் ஆய்வாளர் அலுவலக பகுதிக்கு சென்று காட்டெருமை மேய்ச்சலில் ஈடுபட்டது. நீண்ட நேரத்திற்கு பிறகு காட்டெருமை அங்கிருந்து அருகில் உள்ள புதருக்குள் சென்றது. இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது,  தாசில்தார் அலுவலகம் மற்றும் அரசு கருவூலம் பகுதியில் தொடர்ந்து காட்டெருமைகளின் நடமாட்டம் இருந்து வருகிறது. ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்படும் முன்பு காட்டெருமைகளை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Next Story