வீடு புகுந்து மூதாட்டியிடம் 6 பவுன் நகை பறிப்பு


வீடு புகுந்து மூதாட்டியிடம் 6 பவுன் நகை பறிப்பு
x
தினத்தந்தி 30 April 2021 11:47 PM IST (Updated: 30 April 2021 11:47 PM IST)
t-max-icont-min-icon

எஸ்.புதூர் அருகே வீடு புகுந்து மூதாட்டியிடம் 6 பவுன் நகை பறிக்கப்பட்டது.

எஸ்.புதூர்,

எஸ்.புதூர் அருகே உள்ள செட்டிகுறிச்சி சிவராமன் நகரை சேர்ந்தவர் பர்குணன்(வயது 70). இவரது மனைவி சின்னம்மாள் (வயது 65). இந்த நிலையில் நேற்று இருவரும் வீட்டில் இருந்தனர். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர் சின்னம்மாளிடம் கியாஸ் புத்தகம் பதிவு செய்வதாக கூறி இருக்கிறார். உடனே சின்னம்மாள், கியாஸ் புத்தகம் எடுக்க சென்றார். அப்போது திடீரென்று அந்த வாலிபர் சின்னம்மாளை கீழே தள்ளி கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் நகையை பறித்து விட்டு மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடி விட்டார்.
இது குறித்த புகாரின் பேரில் புழுதிபட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story