இந்தியர்களை மீட்க திருச்சியில் இருந்து சிறப்பு விமானம் இயக்க அனுமதி


இந்தியர்களை மீட்க திருச்சியில் இருந்து சிறப்பு விமானம் இயக்க அனுமதி
x
தினத்தந்தி 1 May 2021 12:53 AM IST (Updated: 1 May 2021 12:53 AM IST)
t-max-icont-min-icon

ஐக்கிய அரபு நாடுகளில் சிக்கித்தவிக்கும் இந்தியர்களை மீட்க திருச்சியில் இருந்து சிறப்பு விமானம் இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

செம்பட்டு,
இந்தியாவில் கொரோனா வேகமாக பரவி வருவதால், இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு நாடுகளுக்கு இந்தியர்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த 28-ந்தேதி முதல் அந்த நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஐக்கிய அரபு நாடுகளில் சிக்கித்தவிக்கும் இந்தியர்களை மீட்க அந்நாட்டு அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனால் திருச்சியில் இருந்து காலியாக சிறப்பு விமானங்களை இயக்கி அந்த நாட்டில் உள்ள இந்தியர்களை இங்கு அழைத்து வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Next Story