திருப்பூர் தெற்கு தொகுதியை தி.மு.க. கைப்பற்றியது.


திருப்பூர் தெற்கு தொகுதியை  தி.மு.க. கைப்பற்றியது.
x
தினத்தந்தி 2 May 2021 8:59 PM GMT (Updated: 2 May 2021 8:59 PM GMT)

திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதியை அ.தி.மு.க.விடம் இருந்து தி.மு.க. கைப்பற்றியது.

திருப்பூர்
திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதியை அ.தி.மு.க.விடம் இருந்து தி.மு.க. கைப்பற்றியது.
திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதி
திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. வேட்பாளர்கள் உள்பட 20 பேர் போட்டியிட்டனர். இந்த தொகுதியில் மொத்தம் 29 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட்டன.  இந்த தொகுதியில் 2 லட்சத்து 76 ஆயிரத்து 473 வாக்காளர்கள் உள்ளனர். அதில் 1 லட்சத்து 73 ஆயிரத்து 370 வாக்குகள் பதிவானதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த தொகுதியில் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. வேட்பாளர்கள் மாறி மாறி முன்னணியில் வந்தனர். இறுதியாக தி.மு.க. சார்பில் போட்டியிட்ட செல்வராஜ் 75 ஆயிரத்து 535 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க.வேட்பாளர் குணசேகரன் பெற்ற வாக்குகள் 70 ஆயிரத்து 826 வாக்குள் பெற்றார். 
அ.தி.மு.க.விடம் இருந்த இந்த தொகுதி தற்போது தி.மு.க. வசம் சென்றுள்ளது. 

மற்ற வேட்பாளர்கள் பெற்ற ஓட்டுகள் விவரம்:-
1. பி.செல்லபாண்டி (சுயே)- 312
2. ஜி.அருண்குமார் 
(சுயே)-554
3.அனுஷா ரவி 
( ம.நீ.ம)- 9934
4. கே.சண்முகசுந்தரம்
(நாம்தமிழர்)- 12,898
5. கே.தெய்வீகன் ( சுயே)-101
6. ஏ.விசாலாட்சி 
(அ.ம.மு.க.) - 1757
7. ஜெ.அஷ்லம் ( சுயே)-164
8. ஈ. கணேஷ் (சுயே )-66
9. ஏ.காதர்பாஷா ( சுயே)-76
10. ஐ.குணசேகரன் 
(சுயே ) -38
11. எம்.குணசேகரன் 
(சுயே) - 80
12. எம்.ஏ. சர்வலோக தயாபரன் (சுயே )-147
13. ஏ.செல்வராஜ் ( சுயே)-68
14. கே.செல்வன் ( சுயே)-224
15. பிரகாஷா (சுயே )-265
16. ஜி.மலர்விழி ( சுயே)-83
17. கே.முத்துசாமி ( சுயே)-121
18. ஏ. விஜயகுமார் 
(சுயே)- 27
நோட்டா  -1142

Next Story