தி.மு.க. பிரமுகர்கள் 2 பேருக்கு அரிவாள் வெட்டு

புழலில் தி.மு.க. பிரமுகர்கள் 2 பேரை மர்மநபர்கள் அரிவாளால் வெட்டினர். இது தொடர்பாக ஒருவரை கைது செய்த போலீசார், மேலும் 4 பேரை தேடி வருகின்றனர்.
செங்குன்றம்,
சென்னையை அடுத்த புழல் காந்தி தெருவைச் சேர்ந்தவர் குமணன் (வயது 27). இவர், மாதவரம் வடக்கு பகுதி தி.மு.க. மாணவரணி துணை அமைப்பாளராக இருந்து வருகிறார். இவருடைய நண்பரான புழல் லட்சுமிஅம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சந்தோஷ் (26). இவரும் தி.மு.க. பிரமுகர்.
இவர்கள் இருவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் புழல் ஓடை பகுதி அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கிருந்த ஒரு கும்பல் இவர்களை மடக்கி, சரமாரியாக தாக்கினர்.
பின்னர் இருவரையும் அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் இருவருக்கும் பலத்த வெட்டு விழுந்தது. பின்னர் மர்மநபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இதில் படுகாயம் அடைந்த குமணன், சந்தோஷ் இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சென்னை அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு இருவரும் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவரான சந்தோஷ் (28) என்பவரை கைது செய்தனர். மேலும் தலைமறைவான 4 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story