பனைமரத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி

பனைமரத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலியானார்.
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் அருகே சொக்கன்குடியிருப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் சிலுவைதாசன் (வயது 60). பனையேறும் தொழிலாளி. இவருடைய மனைவி சித்ரா ஜெயராணி. இவர்களுக்கு 3 மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.
சிலுவைதாசன், பக்கத்து ஊரான வைரவம் பகுதியில் உள்ள தோட்டத்தில் குத்தகை அடிப்படையில் பனை மரங்களில் ஏறி பதனீர் இறக்கும் வேலை செய்து வந்தார். அவருக்கு உதவியாக மனைவி சித்ரா ஜெயராணியும் சென்றார்.
நேற்று முன்தினம் தோட்டத்தில் உள்ள பனை மரத்தில் சிலுவைதாசன் ஏறினார். அப்போது அவர் எதிர்பாராதவிதமாக பனை மரத்தில் இருந்து தவறி விழுந்து பலத்த காயம் அடைந்தார். இதனை பார்த்த மனைவி அதிர்ச்சி அடைந்தார். உடனே சிலுவைதாசனை மீட்டு சிகிச்சைக்காக திசையன்விளை தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே சிலுவைதாசன் இறந்ததாக தெரிவித்தனர். இதுகுறித்து தட்டார்மடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story