கர்நாடகத்தில் புதிதாக ஒரே நாளில் 47,930 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் புதிதாக 47,930 பேருக்கு கொரோனா
பெங்களூரு:
490 பேர் உயிரிழந்தனர்
கர்நாடகத்தில் நேற்று 1 லட்சத்து 46 ஆயிரத்து 491 பரிசோதனைகள் ேமற்கொள்ளப்பட்டன. இதில் 47 ஆயிரத்து 930 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 19 லட்சத்து 34 ஆயிரத்து 378 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் தொற்றுக்கு ஒரே நாளில் 490 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனால் மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்து 776 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் ஒரே நாளில் 31 ஆயிரத்து 796 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதன் மூலம் மாநிலத்தில் கொரோனாவில் இருந்து 13 லட்சத்து 51 ஆயிரத்து 97 பேர் மீண்டுள்ளனர். மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 5 லட்சத்து 64 ஆயிரத்து 485 ஆக உயர்ந்துள்ளது.
மாவட்ட வாரியாக...
பெங்களூருவில் அதிகபட்சமாக ஒரே நாளில் 20 ஆயிரத்து 897 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாகல்கோட்டையில் ஆயிரத்து 315 பேர், பல்லாரியில் 2 ஆயிரத்து 141 பேர், பெலகாவியில் 613 பேர், பெங்களூரு புறநகரில் 1,066 பேர், பீதரில் 313 பேர், சாம்ராஜ்நகரில் 930 பேர், சிக்பள்ளாப்பூரில் 657 பேர், சிக்கமகளூருவில் 582 பேர், சித்ரதுர்காவில் 111 பேர், தட்சிண கன்னடாவில் 1,694 பேர், தாவணகெரேயில் 453 பேர், தார்வாரில் 777 பேர், கதக்கில் 368 பேர், ஹாசனில் 2 ஆயிரத்து 349 பேர், ஹாவேரியில் 370 பேர், கலபுரகியில் 1,062 பேர், குடகில் 576 பேர், கோலாரில் 424 பேர், கொப்பலில் 291 பேர்,
மண்டியாவில் 1,959 பேர், மைசூருவில் 1,854 பேர், ராய்ச்சூரில் 702 பேர், ராமநகரில் 604 பேர், சிவமொக்காவில் 650 பேர், துமகூருவில் 2,001 பேர், உடுப்பியில் 962 பேர், உத்தரகன்னடாவில் 917 பேர், விஜயாப்புராவில் 597 பேர், யாதகிரியில் 695 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.
உயிரிழப்பு
கொரோனாவுக்கு பெங்களூரு நகரில் 281 பேரும், பல்லாரியில் 21 பேரும், பீதரில் 6 பேரும், சாம்ராஜ்நகரில் 15 பேரும் இறந்து விட்டனர். சிக்பள்ளாப்பூரில் 4 பேரும், சிக்கமகளூருவில் 2 பேரும், தட்சிண கன்னடாவில் 2 பேரும், தார்வாரில் 4, பேரும், கதக்கில் 3 பேரும், ஹாசனில் 8 பேரும், ஹாவேரியில் 8 பேரும், கலபுரகியில் 12 பேரும், குடகில் 7 பேரும், கோலாரில் 3 பேரும், மண்டியாவில் 9 பேரும் இறந்துள்ளனர்.
மேலும் மைசூருவில் 13 பேரும், ராய்ச்சூரில் 5 பேரும், ராமநகரில் 13 பேரும், சிவமொக்காவில் 17 பேரும், துமகூருவில் 17 பேரும், உடுப்பியில் 5 பேரும், உத்தரகன்னடாவில் 9 பேரும், விஜயாப்புராவில் 6 பேரும், யாதகிரியில் 6 பேரும் என மொத்தம் 490 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story