மொபட்டில் கடத்தப்பட்ட 50 மதுபாட்டில்கள் பறிமுதல்


மொபட்டில் கடத்தப்பட்ட 50 மதுபாட்டில்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 10 May 2021 2:22 AM IST (Updated: 10 May 2021 2:22 AM IST)
t-max-icont-min-icon

மொபட்டில் கடத்தப்பட்ட 50 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

விக்கிரமங்கலம்:
கொரோனா பரவலை தடுக்க இன்று(திங்கட்கிழமை) முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இதனால் இன்று முதல் டாஸ்மாக் கடைகளும் மூடப்படுகின்றன. இதனால் நேற்று டாஸ்மாக் கடைகளில் ஏராளமானவர்கள் அதிக அளவில் மது பாட்டில்களை வாங்கிச்சென்றனர். இந்நிலையில் அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லோகநாதன் மற்றும் போலீசார் அம்பலவர் கட்டளை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அம்பலவர் கட்டளையில் இருந்து விக்கிரமங்கலம் நோக்கி முன்பக்கம் ஒரு மூட்டையுடன் வந்த மொபட்டை மறித்து சோதனை செய்ய முயன்றனர். ஆனால் மொபட்டை ஓட்டி வந்த நபர், சாலையின் ஓரமாக மொபட்டை நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து மொட்டில் இருந்த மூட்டையை பிரித்து பார்த்தபோது, அதில் மது பாட்டில்கள் இருந்தது போலீசாருக்கு தெரியவந்தது. அதில் இருந்த 50 மதுபாட்டில்களையும், அவற்றை கடத்த பயன்படுத்தப்பட்ட மொபட்டையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

Related Tags :
Next Story