ஆரம்ப சுகாதார நிலையத்தில் 110 பேருக்கு கொரோனா பரிசோதனை

நல்லட்டிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 110 பேருக்கு கொரோனா பரிசோதனை
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு அருகே உள்ள நல்லட்டிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரிந்து வந்த பெண் டாக்டர் உட்பட 3 பேருக்கு கொரோனா உறுதியானதால் 2 நாட்கள் மூடப்பட்டது.
இந்த ஆரம்ப சுகாதார நிலையம் வழக்கம்போல திறக்கப்பட்டு செயல்பட்டது. 100 பேருக்கு கொரோனா தடுப்பூசியும், 119 பேருக்கு கொரோனா பரிசோதனையும் செய்யப்பட்டது.
இது குறித்து மருத்துவ அதிகாரிகள் கூறும்போது, கொரோனா பரவாமல் இருக்க அனைவரும் முகக்கவசம் அணிவதுடன், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.,
காய்ச்சல், சளி, உடல் வலி, வயிற்றுப்போக்கு இருந்தால் உடனடியாக அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்று பரிசோதனை செய்ய வேண்டும் என்றனர்.
Related Tags :
Next Story