பெண்களிடம் 13 பவுன் நகைகள் பறிப்பு
பெண்களிடம் 13 பவுன் நகைகள் பறிப்பு
மதுரை
மதுரை பழங்காநத்தம் திருவள்ளூவர் நகரை சேர்ந்தவர் பிரேம்குமார் மனைவி சுதா(வயது 47). இவர் தனது மகளுடன் மொபட்டில் கடைக்கு சென்று விட்டு காளவாசல் மேம்பாலம் பகுதியில் வந்து கொண்டிருந்தார். அப்போது மர்மநபர்கள் 2 பேர் அவரை மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்தனர். திடீரென்று அவர்கள் சுதா கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் நகையை பறித்த கொண்டு தப்பிவிட்டனர். அதில் நிலை தடுமாறி மொபட்டில் சென்ற இருவரும் தடுமாறி கீழே விழுந்தனர். பின்னர் சம்பவம் குறித்து சுதா எஸ்.எஸ்.காலனி போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மதுரை கீழபனாங்காடி செந்தூர் நகர் பகுதியை சேர்ந்தவர் சாந்தி(24). சம்பவத்தன்று இவர் கடைக்கு சென்று விட்டு வீட்டிற்கு செல்வதற்காக குலமங்கலம் மெயின் ரோடு பகுதியில் நடந்து சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் 2 பேர் அந்த வழியாக வந்தனர். அவர்கள் ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் தனியாக நடந்து செல்லும் அவரை பின்தொடர்ந்து வந்தனர். திடீரென்று அவர்கள் சாந்தி கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் நகையை பறித்து கொண்டு தப்பி விட்டனர். இதுகுறித்து கூடல்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மதுரையில் இரு வேறு சம்பவங்களில் தனியாக செல்லும் பெண்களை பின்தொடர்ந்து வந்து ஒரே நாளில் 13 பவுன் நகை பறிக்கப்பட்டது. அவர்களை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story