மாவட்ட செய்திகள்

ஊரடங்கை மீறியதாக 323 பேர் மீது வழக்கு + "||" + 323 prosecuted for violating curfew

ஊரடங்கை மீறியதாக 323 பேர் மீது வழக்கு

ஊரடங்கை மீறியதாக 323 பேர் மீது வழக்கு
ஊரடங்கை மீறியதாக 323 பேர் மீது வழக்கு
மதுரை
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனை கட்டுப்படுத்தும் விதமாக அரசு கட்டுப்பாடுகளுடன் முழு ஊரடங்கு 10-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை அறிவித்துள்ளது. அதன்படி நண்பகல் 12 மணி வரை மட்டுமே அத்தியாவசிய பொருள்கள் வாங்க கடைகள் திறக்கப்பட்டு இருக்கின்றன. மேலும் பஸ் போக்குவரத்தும் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுபோல் முழு ஊரடங்கு நாட்களில் தேவை இன்றி சுற்றித்திரியும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது. அதன்படி மதுரை மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 323 நபர்கள் சரிவர முக கவசம் அணியாமல் சென்றதால் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதுபோல் தேவையின்றி வாகனங்களில் சுற்றித்திரிந்த நபர்களை போலீசார் எச்சரித்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யாமல் மீண்டும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடாதவாறு அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. 10 பேர் மீது வழக்கு
காரைக்குடியில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய 10 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது.
2. அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக தொடர்ந்த வழக்குகள் சபாநாயகர் அப்பாவு வாபஸ் பெற்றார்
முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, ஆர்.காமராஜ் ஆகியோருக்கு எதிராக தொடர்ந்த வழக்குகளை சபாநாயகர் அப்பாவு திரும்ப பெற்றார்.
3. தற்கொலை செய்த நடிகர் சுஷாந்த் சிங் வாழ்க்கை பட வழக்கு தள்ளுபடி
தற்கொலை செய்த நடிகர் சுஷாந்த் சிங் வாழ்க்கை பட வழக்கு தள்ளுபடி.
4. காதலி வீட்டுக்குள் புகுந்து வாலிபருக்கு வெட்டு
மானாமதுரை அருகே காதலி வீட்டுக்குள் புகுந்து வாலிபரை வெட்டிய 4 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது.
5. ஆர்ப்பாட்டம் நடத்திய 10 பேர் மீது வழக்கு
எஸ்.புதூர் அருகே அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய 10 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது.